ஸூரத்து அல்-பகறா (Surah Al-Baqarah) – (கடைசி இரண்டு வசனங்கள்)
ஸூரத்து அல்-பகறா (Surah Al-Baqarah) – (கடைசி இரண்டு வசனங்கள்)
اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَ الْمُؤْمِنُوْنَؕ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ
لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ؕ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْؕ رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ۚرَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ ۚ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ
285. (நம்) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்புகிறார்: (அவ்வாறே) நம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர் (மலக்கு)களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்; "அவனது தூதர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை காண்பிக்கமாட்டோம்" (என்றும்); "இன்னும், நாங்கள் செவிமடுத்தோம்; நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள்.
286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அதனுடைய சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும், எங்களை(க் குற்றம்) பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு இயலாததை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பிழைகளைப் பொறுத்து, எங்களை மன்னிப்பாயாக! எங்களுக்கு அருள்புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; நிராகரிக்கும் கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்வாயாக!"
✔ இவை இறைநம்பிக்கையின் முக்கியத்துவத்தையும், மறைக்குறிப்புகளின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் வசனங்கள்.
✔ இந்த வசனங்களை இரவில் தூங்கும் முன் ஓதினால், முழு இரவும் பாதுகாப்பாக இருக்கும். (ஹதீஸ்: ஸஹீஹ் புகாரி, 5009)
(முழு ஹதீஸைப் பார்க்க: இங்கே கிளிக் செய்யவும்)
✔ அல்லாஹ்வின் மன்னிப்பையும் இரக்கத்தையும் பெற, தினமும் இந்த வசனங்களை ஓத வேண்டும்.
💚 அல்லாஹ்வின் அருள் பெற, இந்த வசனங்களை மனப்பாடம் செய்து தினமும் ஓதுங்கள்! 🤲✨