(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம்; அவர்கள் இதன் வசனங்களைச் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும். Surah Saad (38:29)
Step 1: Takbir (தக்பீர்) அல்லாஹு அக்பர்" (الله أكبر) : அர்த்தம்: "அல்லாஹ் மிகப்பெரியவன் "
Step 2: Standing (கியாம்)
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ
சுப்ஹானாக அல்லாஹும் வபிஹம்திக வதபாரக இஸ்முக வதஅலா ஜத்றுக வலா இலாஹா கைருக
அர்த்தம்:
இறைவா! உனக்கு மட்டுமே புகழ் உரியது. உனது பெயர் பரிபூரணமாக புனிதமானது. உனது மகத்துவம் உயர்ந்தது. உன்னைவிட வழிபாட்டிற்குரிய வேறெவரும் இல்லை.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அர்த்தம்:
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).
ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
அல்-ஹம்து லில்லாஹி ரப்பில்-ஆலமீன்
அர்த்தம்:
எல்லாப் புகழும் உலகங்களின் இறைவனுக்கு உரியது.
ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
அர்ரஹ்மானிர் ரஹீம்
அர்த்தம்:
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ
மாலிகி யௌமித்தீன்
அர்த்தம்:
அவனே நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி.
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
இய்யாக நஅபுது வ இய்யாக நஸ்தஈன்
அர்த்தம்:
உன்னையே நாம் வழிபடுகின்றோம், உன்னிடமே உதவி கேட்கிறோம்.
ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ
இஹ்தினஸ் சிறாத்தல் முஸ்தகீம்
அர்த்தம்:
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
சிறாத்தல்லதீனா அந்அம்த அலைஹிம்,கைரில் மக்தூபி அலைஹிம் வலத்தாள்லீன்
அர்த்தம்:
(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.
EG " ஸூரா அல்-இக்லாஸ்
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ
குல் ஹுவல்லாஹு அஹத்
அர்த்தம்:
கூறுவீராக : அவன் அல்லாஹ் ஒருவனே.
ٱللَّهُ ٱلصَّمَدُ
அல்லாஹுஸ் ஸமத்
அர்த்தம்:
அல்லாஹ் எவரிடத்திலும் தேவையற்றவர், (அனைவருக்கும் தேவையானவர்)
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
லம்யலித் வ லம்யூலத்
அர்த்தம்:
அவன் பிறக்கவில்லை, பிறப்பிக்கப்படவும் இல்லை.
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌ
வலம்யகுய் லஹூ குபுவன்அஹத்
அர்த்தம்:
அவனுக்கு சமமானவராக எவரும் இல்லை
Step 3 : Rukoo (குனிவு)
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ وَبِحَمْدِهِ
ஸுப்ஹான ரப்பியல் அழீம் (வபிஹம்திஹி).
"என் மிகப்பெரிய மகிமையுடைய இறைவன் புனிதமானவர். "
Step 4: I’tidal (நிமிர்ந்த நிலையில் நிற்கும் நிலை ருகூவின் பின்பு)
1.سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ
ஸமிஅல்லாஹு லிமன் ஹமித
"அல்லாஹ் அவனைப் புகழ்ந்தவரின் புகழை ஏற்கிறான். "
2.رَبَّنَا لَكَ الْحَمْدُ
ரப்பனா லகல் ஹம்து
"எங்கள் இறைவனே ! உனக்கே எல்லாப் புகழும் உரித்து. "
Step 5 : Sujood (Prostration)
1.سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى وَبِحَمْدِهِ
ஸுப்ஹான ரப்பியல் அஃலா (வபிஹம்திஹி)
"எனது உயர்வான நாயனைப் புகழ்ந்து துதிக்கிறேன்,"
Step 6: Jalsa (Sitting Between Two Sujoods)
Dua:
رَبِّ اغْفِرْ لِي
Tamil Transliteration:
ரப்பிக்ஃபிர்லீ
Tamil Meaning:
"என் இறைவா! என்பாவங்களை மன்னித்தருள்வாயாக!"
Step 7: Tashahhud (கடைசி உட்கார்வு )
التَّحِيَّاتُ لِلّٰهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ. السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. السَّلَامُ عَلَيْنَا وَعَلَىٰ عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ. أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. اللَّهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.
Tamil Transliteration:
அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலாவாத்து வத்தய்யிபாத்து. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்து. அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ்ஸாலிஹீன். அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸூலுஹு. அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலை இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீது
Tamil Meaning:
அனைத்து வாழ்த்துகளும், தொழுகைகளும், நல்ல செய்கைகளும் அல்லாஹ்வுக்கே உரியவை. சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் நபி முஹம்மது (ஸல்) மீது உண்டாகட்டும். சாந்தி நம்மிடமும், அல்லாஹ்வின் நற்செயல் புரியும் அடியார்களிடமும் உண்டாகட்டும். நான் சாட்சி தருகிறேன், அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தத் தெய்வமும் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார். அல்லாஹ்வே, முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் ஆசீர்வாதங்களை அருளுங்கள். நீ இப்ராஹீமுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் அருளியதுபோல். நிச்சயமாக நீயே புகழுக்குரியவனும் மகத்துவமுடையவனும் ஆவாய்.
.
Step 8 : இறுதி நிலை: தஸ்லீம் (Tasleem)
Tamil Transliteration:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
Tamil Meaning:
"உங்கள்மீது சாந்தியும், அல்லாஹ்வுடைய அருளும் உன்டாவதாக "